தினமும் 1600 km பயணம்... வேலைக்காக இடம் மாற மறுத்த CEO: அவர் வாங்கும் சம்பளம்
அமெரிக்காவின் Starbucks நிறுவனம் தங்களின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி தினசரி அலுவலகத்திற்கு வந்து செல்ல விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இழப்புகளை எதிர்கொண்டுவந்த
இதனால் கலிபோர்னியாவில் வசிக்கும் அவர் தினசரி 1600 கி.மீ பயணம் செய்து Seattle பகுதியில் அமைந்துள்ள Starbucks தலைமையகத்திற்கு வேலைக்கு வருகிறார்.
Starbucks நிறுவனம் இழப்புகளை எதிர்கொண்டுவந்த நிலையில் தான் 50 வயதான Brian Niccol தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சம்பளமாக ஆண்டுக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறும் அவர், ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு 7.2 மில்லியன் டொலர் பெறுகிறார்.
சீனா மற்றும் அமெரிக்காவில் கடும் நெருக்கடியை சந்தித்த Starbucks நிறுவனம், அதுவரை தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்த இந்தியர் லக்ஷ்மன் நரசிம்மன் என்பவருக்கு பதிலாக Brian Niccol என்பவரை நியமித்தது.
பல்வேறு சந்திப்புகளை
முன்பு பணியாற்றிய நிறுவனத்தில், அதன் பங்கு மதிப்பை 773 சதவிகிதத்திற்கு உயர்த்தியவர் Brian Niccol. இதனாலையே Starbucks நிறுவனம் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.
மட்டுமின்றி, 1600 கி.மீ பயணம் மேற்கொள்வதையும் Starbucks நிறுவனம் ஆதரித்துள்ளது. Seattle பகுதியில் தலைமையகம் அமைந்திருந்தாலும், அவர் எப்போதும் தொழில் ரீதியான பல்வேறு சந்திப்புகளை முன்னெடுக்கும் பொருட்டு பயணப்பட வேண்டியுள்ளது.
இதனாலையே கலிபோர்னியாவில் வசிக்கும் அவருக்காக தனிப்பட்ட விமானம் ஒன்றை Starbucks நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |