உலக புகழ்பெற்ற காபி நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியர் நியமனம்! அவருக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனம் உலக புகழ்பெற்ற காபி நிறுவனமாகும்.
80 நாடுகளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டார்பக்ஸ் கார்ப் நிறுவனம் அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மனை நியமித்துள்ளது. அவர் முந்தைய சி.இ.ஓ.வான Howard Schultz-க்கு மாற்றாக இந்த பதவியை ஏற்கவுள்ளார்.
நரசிம்மன் ஸ்டார்பக்ஸில் தனது வருடாந்திர அடிப்படை சம்பளமாக $1.3 மில்லியன் (சுமார் ரூ. 10 கோடி) பெறுவார் என்று ஒரு ஒழுங்குமுறை தாக்கல் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, புதிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு $1.5 மில்லியன் (ரூ. 12 கோடி) போனஸ் (cash signing bonus) மற்றும் 9.25 மில்லியன் டொலர் (சுமார் ரூ. 73 கோடி) இலக்கு மதிப்பில் மாற்று ஈக்விட்டி மானியம் (replacement equity grant) வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நரசிம்மன் இதற்குமுன் Reckitt நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார், இது டியூரெக்ஸ் ஆணுறைகள், என்ஃபாமில் பேபி ஃபார்முலா மற்றும் மியூசினெக்ஸ் குளிர் சிரப் ஆகியவற்றையும் தயாரிக்கிறது. அவர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தா பிறகு FTSE-பட்டியலிடப்பட்ட ரெக்கிட்டின் பங்குகள் 4% சரிந்தன.
தலைமை நிர்வாக அதிகாரியாக தனது புதிய பதவியை ஏற்க, நரசிம்மன் லண்டனில் இருந்து நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள சியாட்டிலுக்கு இடம் மாற வேண்டும். அதனால், அவர் அக்டோபரில் ஸ்டார்பக்ஸில் சேருவார், ஆனால் நிறுவனத்தைப் பற்றியும் அதன் "ரீஇன்வென்ஷன்" திட்டத்தைப் பற்றியும் சில மாதங்கள் கற்ற பிறகு, ஏப்ரல் 2023-ல் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.