நொறுங்கிய பாகிஸ்தான் ஜாம்பவானின் 23 ஆண்டுகால சாதனை! கெத்து காட்டிய ஸ்டார்க்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வரலாற்று சாதனை படைத்தார்.
தெறிக்கவிட்ட மிட்செல் ஸ்டார்க்
பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. மிட்செல் ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பென் டக்கெட் ஓட்டங்கள் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஓலி போப் ஓட்டங்கள் எடுக்காத நிலையில் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
பின்னர் அதிரடி காட்டிய ஹாரி ப்ரூக்கின் (31) விக்கெட்டையும் ஸ்டார்க் கைப்பற்ற, டெஸ்டில் புதிய வரலாறு படைத்தார். 
சாதனை முறியடிப்பு
102வது டெஸ்டில் விளையாடும் ஸ்டார்க் 415 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம், டெஸ்டில் இடக்கை வீரராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் (414) சாதனையை ஸ்டார்க் முறியடித்தார்.
சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டார்க் 15வது இடத்தைப் பிடித்துள்ளார். 
முதல் நாளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவர் ஹர்பஜன் சிங்கை (417) முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |