புதிய உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய வேகப்புயல்!
பாகிஸ்தான் பந்துவீச்சாளரின் உலக சாதனையை முறியடித்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்
32 வயதாகும் ஸ்டார்க் 71 டெஸ்ட் போட்டிகளில் 287 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஸ்தாக் இந்த சாதனையை செய்திருந்தார்.
அவர் 104 இன்னிங்சில் படைத்த சாதனையை ஸ்டார்க் 102 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார். பிரெட் லீ (112) மூன்றாவது இடத்திலும், ஆலன் டொனால்ட் (117) நான்காவது இடத்திலும், வாக்கர் யூனிஸ் (118) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
That's ODI wicket No.200 for Mitch Starc! #AUSvZIM pic.twitter.com/1kBz0kMuCy
— cricket.com.au (@cricketcomau) September 3, 2022
அதேபோல் 200 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் கைப்பற்றிய 6வது அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஆவார்.