சிக்ஸர் மழை பொழிந்த மேற்கிந்திய தீவு... கடைசி ஓவரில் கதறவிட்ட ஸ்டார்க்: 11 ரன் எடுக்க முடியாமல் தோல்வியடைந்த வீடியோ
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில், கடைசி ஓவரில் கலக்கிய மிட்சல் ஸ்டார்க் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியா அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் மூன்று போட்டிகளில் மேற்கிந்திய தீவு வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
அதன் படி முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குட ஆடிய மேற்கிந்திய தீவு அணிக்கு, துவக்க வீரர்களான சிம்மன்ஸ், எவன் லிவிஸ் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை இருவருக்கும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டனர். லிவிஸ் 14 பந்துகளில் 31 ஓட்டங்களும், சிம்மின்ஸ் 48 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரி என 72 ஓட்டங்கள் குவிக்க, இவர்களைத் தொடர்ந்து வந்த கெயில் சொதப்ப, கடைசி கட்டத்தில், ஆன்ட்ரூ ரசுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
A death bowling masterclass from Mitchell Starc ?
— Cricket on BT Sport (@btsportcricket) July 15, 2021
With West Indies needing 11 off the last over, and Andre Russell on strike, he bowled five dots in a row ? pic.twitter.com/GhuyxRvxVF
கடைசி இரண்டு ஓவரில் அணியின் வெற்றிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, ரிலே மெரிடித் வீசிய 19-ஆவது ஓவரில் ரஸல் ஒரு சிக்ஸரும், ஆலன் ஹாட்ரிக் சிக்ஸரும் அடித்து அந்த ஒரு ஓவரில் மட்டும் 25 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்கள்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆலன் 29 (14) ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவு அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் ஆண்ட்ரூ ரஸல் இருந்ததால், மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஸ்டார்க்கோ, நான் எப்படி விட்டுத் தருவேன் என்று அற்புதமாக பந்து விச, முதல் நான்கு பந்திகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்க முடியவில்லை.
5-ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்கள், கடைசி பந்தில் பவுண்டரி மட்டுமே அடிக்க, இறுதியில் மேற்கிந்திய தீவு அணி, வெறும் 6 ஓட்டங்கள் மட்டும் அடித்து, 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.