அதிர்ச்சியாக இருந்தது! இவ்வளவு தொகைக்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை: வியந்து கூறிய வேகப்புயல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வியந்து கூறியுள்ளார்.
24.75 கோடி
2024ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு விலை போனார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் இதன்மூலம் பெற்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியது. 33 வயதாகும் ஸ்டார்க் உலகக்கோப்பையில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டி இருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு ஏலம் போனார்.
Getty Images/Darrian Traynor
நெருக்கடி இருக்கும்
இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டது குறித்து கூறுகையில், 'இது உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
எனது மனைவி அலிசா ஹீலி தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார். அவர் ஏலத்தில் எனது தொகை விவரத்தை, நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு கூறிவிட்டார்.
இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் கடைசியாக விளையாடிய ஐபிஎல்லில் பெற்ற அனுபவம் அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன்' என தெரிவித்துள்ளார்.
ESPNcricinfo
ஸ்டார்க், கம்மின்ஸ் போல டிராவிஸ் ஹெட்டும் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அனுபவ வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |