மீண்டும் வேகப்புயல் என நிரூபித்த ஸ்டார்க்! தொடக்கத்திலேயே ஆட்டம் கண்ட SRH
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினார்.
அபிஷேக் ஷர்மா பரிதாபமாக ரன்அவுட்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.
SRH அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா பரிதாபமாக ரன்அவுட் ஆனார்.
டிராவிஸ் ஹெட் அசால்ட்டாக ரன் ஓட ஆரம்பித்து, மறுமுனையில் இருந்த அபிஷேக்கை அழைத்தார். அபிஷேக் கிரீஸை அடைவதற்குள் விப்ராஜ் துரிதமாக செயல்பட்டு ரன்அவுட் செய்தார்.
அடுத்து வந்த இஷான் கிஷன் 2 ஓட்டங்களில், ஸ்டார்க் பந்துவீச்சில் அடித்த ஷாட்டை எல்லையில் இருந்து ஸ்டப்ஸ் கேட்ச் செய்தார்.
ஸ்டார்க் மிரட்டல்
பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமாரும், ஸ்டார்க் ஓவரில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 22 (12) ஓட்டங்களில் ஸ்டார்க் ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதனால் 37 ஓட்டங்கள் எடுப்பதற்குள் SRH அணி 4 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மிட்சேல் ஸ்டார்க் (Mitchell Starc) தனது மிரட்டலான பந்துவீச்சு மூலம் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |