இந்தியாவிற்கு வர உள்ள ஸ்டார்லிங்க் சேவை - மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இணைய சேவையை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் கால் பதிக்க உள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் கட்டணம்
செயற்கைகோள்கள் மூலமாக இணைய சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது சேவையை வழங்கி வருகிறது.
இந்தியாவிலும், இணையசேவை வழங்க அனுமதி கோரி, கடந்த 2022 ஆம் ஆண்டே விண்ணப்பித்திருந்தது.
தற்போது அரசு இறுதி அனுமதி அளிக்க உள்ள நிலையில், விரைவில் ஸ்டார்லிங்க் இந்தியாவில் இணைய சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க்கின் X தளத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் விதிக்க உள்ள ஐரோப்பிய ஒன்றியம் - என்ன காரணம்?
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், முதற்கட்டமாக மாதம் ரூ.840 க்கு அன்லிமிடெட் இணைய சேவையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7,000 அதிகமான செயற்கைகோள்களை ஸ்டார்லிங்க் நிறுவனம் விண்ணில் ஏவியுள்ளது. உலகளவில் 5.4 மில்லியன் பயனர்கள் ஸ்டார்லிங்க் இணையசேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |