இலங்கையில் Starlink சேவை தொடக்கம்., விரைவில் இந்தியாவிலும்
ஸ்டார்லிங்க் (Starlink) இலங்கையில் தனது சேவைகளை இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.
எலான் மஸ்க் நடத்தும் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) உருவாக்கிய ஸ்டார்லிங் இலங்கையில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இதன்மூலம் பூட்டான் மற்றும் வங்கதேசத்திற்குப் பிறகு தெற்காசியாவில் ஸ்டார்லிங்க் சேவையை பெறும் மூன்றாவது நாடாக இலங்கை ஆனது.
Starlink இணையம் உயர் வேகத்திலும் குறைந்த தாமதத்துடனும், நாட்டின் கடைக்கோடி பகுதிகளிலும் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் தனது X பக்கத்தில், "ஸ்டார்லிங்கின் இன்டர்நெட் இப்போது இலங்கையில் கிடைக்கிறது!" எனக் கூறியுள்ளது.
இந்தியாவிலும் ஸ்டார்லிங் சேவை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. சமீபத்தில் இந்திய தொலைதொடர்பு துறை (DoT) மூலம் முக்கிய உரிமம் வழங்கப்பட்டது.
தற்போது, இந்திய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும்.
தற்போது Starlink உலகில் மிகப்பாரிய செயற்கைக்கோள் இணையம் கொண்ட நிறுவனம், 6,750-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி செயலில் உள்ளன.
ஆசியாவில் ஏற்கனவே ஜப்பான், மங்கோலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் சேவை வழங்கப்படுகிறது.
இந்தியாவில், இந்த சேவை தொடங்கும்போது கிராமப்புறங்களிலும் தடையின்றி இன்டர்நெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Starlink India launch, Starlink Sri Lanka internet, Elon Musk Starlink in South Asia, Starlink DoT license India, Starlink IN-SPACe India approval, Satellite internet India, Starlink remote internet India, Elon Musk India internet plan, Starlink service in Asia, Starlink India rollout 2024