புடினுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
அடுத்த 24 மணி நேரத்தில் ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி புடினுக்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கெடு விதித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் அனைவரின் ஆதரவும் தமக்கிருப்பதாகவும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கொடிய மற்றும் சட்டவிரோத படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய அழுத்தத்தைப் பற்றி விவாதிக்க, ஸ்டார்மர் கியேவில் பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்களை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காகச் சந்தித்தார்.
போர் நிறுத்தம் தோல்வியடைந்தால் உக்ரைனுக்கான செலவு அதிகரிக்கும் என்றும் ரஷ்யா மேலும் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படும் என்றும் பிரித்தானியப் பிரதமர் கூறினார்.
ஐரோப்பியத் தலைவர்கள் புடினைக் கண்டிப்பதாகவும், புடின் சமாதானத்தை ஏற்றுக்கொள்வதில் இனி இருக்கலாம் அல்லது ஆனால் போன்ற கருத்துக்கு இடமில்லை என்றும் ஸ்டார்மர் கூறினார்.
மேலும் ஐரோப்பியத் தலைவர்கள் திங்கள்கிழமை முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைவர்கள் தங்கள் சந்திப்பிற்கு முன்னும் பின்னும் ஜனாதிபதி ட்ரம்பிடம் கலந்துரையாடியதாகவும் தங்கள் திட்டத்தில் ட்ரம்ப் உடன்பட்டுள்ளதாகவும் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் தொடங்கும்
ரஷ்யாவுக்கு எதிராக தனது வலுவான நிலைப்பாட்டைத் தொடர்ந்த ஸ்டார்மர், இந்த சட்டவிரோத மோதலைத் தொடங்கிய ஒரே ஒரு நாடு ரஷ்யா மட்டுமே, அமைதி திரும்ப தடையாக நிற்கும் ஒரே ஒரு நாடும் ரஷ்யாவே என ஸ்டார்மர் சாடியுள்ளார்.
உக்ரைனுக்கு அமைதியை உறுதி செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய ஐரோப்பிய தலைவர்கள் உறுதியாக இருப்பதாக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜேர்மன் சேன்ஸலர் கூறினார். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவிக்கையில்,
நாங்கள் அமைதியை விரும்புகிறோம், அது திங்கட்கிழமை முதல் தொடங்கும் என்று நம்புகிறோம் என்றார். உக்ரைனுக்கான ஆதரவு இன்றுடன் நின்றுவிடாது என்றும், ஏனெனில் நட்பு நாடுகள் முழுமையான ஒற்றுமை நிலைக்கு வந்துவிட்டதாகவும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரஷ்யா மீதான ஐரோப்பாவின் மோதல் போக்கை ஜனாதிபதி மாளிகை கண்டித்துள்ளது. மேலும், வெளிநாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து ஆதரவளிக்கும் வரை, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை ஏற்க மாட்டோம் என்று ரஷ்யா முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |