பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க முயற்சி: பிரதமர் மீது குற்றச்சாட்டு
பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க முயல்வதாக பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என முந்தைய அரசுகள் நம்மை ஏமாற்றிவிட்டன என்கிறார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

ஆனால், அவர் மீண்டும் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க முயல்வதாக யூகே ரீஃபார்ம் கட்சியின் தலைவரான நைஜல் ஃபராஜும், முந்தைய கன்சர்வேட்டிவ் ஆட்சியில் உள்துறைச் செயலராக இருந்த பிரீத்தி பட்டேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துகொள்வதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

ஆனால், மீண்டும் பிரித்தானியாவை எப்படியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் காலில் விழச் செய்ய ஸ்டார்மர் கங்கணங்கட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார் நைஜல் ஃபராஜ்.

அதேபோல, பிரீத்தி பட்டேலும், இன்னமும் பிரித்தானியா மீது பல்வேறு விடயங்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
ஸ்டார்மர் பிரெக்சிட்டை திருப்பி மீண்டும் அதிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் கையில் கொடுக்க விரும்புகிறார்.
சொல்லப்போனால், பிரெக்சிட்டை முழுமை பெறச் செய்ய, பிரித்தானியா மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவேண்டும் என்றும் கூறியுள்ளார் பிரீத்தி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |