லேபர் கட்சி கிளர்ச்சியில் சிக்கிய ஸ்டார்மர்: இஸ்ரேல் இனப்படுகொலையை கண்டிக்க கோரிக்கை
இஸ்ரேலுக்கு எதிராக மேலும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரதமர் ஸ்டார்மருக்கு அழுத்தம் கொடுக்க லேபர் கட்சியினர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதத் தடை விதிக்க
காஸா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை இனப்படுகொலை என்று அறிவிக்கவும் இன்று அழுத்தம் கொடுக்க உள்ளனர்.
பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ள உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை அறிவிக்கவும் இஸ்ரேலுக்கு எதிராக முழு ஆயுதத் தடை விதிக்கவும் கட்சியின் வருடாந்திர மாநாடு முன்வர வேண்டும் என கோரியுள்ளனர்.
இன்று காலை லிவர்பூலில் உள்ள நிகழ்விடத்திற்கு வெளியே எதிர்ப்பாளர்கள் மீண்டும் கூடினர். யூனிசன் தொழிற்சங்கத்தால் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒன்றில், இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தியது என்பதை ஐ.நா ஆணையம் கண்டறிந்ததை லேபர் கட்சியின் மாநாடு அங்கீகரிக்க வேண்டும்.
பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அவரது அமைச்சர்கள் இதுவரை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை இனப்படுகொலை என அடையாளபப்டுத்த மறுத்து வருகின்றனர்.
புதிய பிரேரணை
முன்மொழியப்பட்ட இன்னொரு தீர்மானம் என்பது, இஸ்ரேலுக்கான எவ்வித ஆயுத ஒப்பந்தங்களும் உடனடியாக கைவிடப்பட வேண்டும். கனடா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானியாவும் பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரித்த நிலையிலேயே இரண்டு புதிய பிரேரணைகளை லேபர் கட்சி ஆர்வலர்கள் முன்மொழிந்துள்ளனர்.
ஆனால், இந்த பிரேரணைகளை ஆதரிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியுள்ளது இந்த நிலையில், புதிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர் டெஹ்ரிவிக்கையில், காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை என்பது தார்மீக நயம் அற்ற செயல் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |