மீண்டும் இடைத்தேர்தலில் தோல்வி... முக்கிய தொகுதியை இழந்த பிரித்தானிய பிரதமர் கட்சி
பிரித்தானியாவை ஆளும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சார்ந்த லிபரல் கட்சி, மீண்டும் ஒரு முக்கிய தொகுதியை இழந்துள்ளது.
மீண்டும் இடைத்தேர்தலில் தோல்வி...
ஸ்டார்மரின் லேபர் கட்சி, ஏற்கனவே லேபர் கோட்டையாக இருந்த Runcorn and Helsby தொகுதியை Reform UK கட்சியிடம் பறிகொடுத்தது.
தற்போது, லேபர் கோட்டையாக இருந்த West Hampstead தொகுதியையும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி தட்டிப் பறித்துள்ளது.
அத்தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் லேபர் கட்சி வெறும் 21.2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 54.4 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே, பிரதமர் ஸ்டார்மர், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், காசா நிலைப்பாடு முதலான விடயங்களால் மக்களிடையே ஆதரவை இழந்துவரும் நிலையில், இந்த தேர்தல் தோல்வி லேபர் கட்சிக்கும் பிரதமர் ஸ்டார்மருக்கும் பெரிய அடியாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |