ஏழைகள் மேலும் ஏழைகளாக, செல்வந்தர் செழிக்கிறார்கள்: லேபர் அரசின் மீது விமர்சனம்
பிரித்தானியாவில் ஆளும் லேபர் ஆட்சியில், ஏழைகள் மேலும் ஏழைகளாகிக்கொண்டே செல்ல, செல்வந்தர்களின் செல்வம் செழிப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏழைகள் மேலும் ஏழைகளாக...
2024ஆம் ஆண்டில் லேபர் அரசு பிரித்தானியாவில் ஆட்சியமைத்ததிலிருந்து, ஏழை மக்கள் அத்தியாவசிய விடயங்களுக்காக செலவு செய்தல் 2.1 சதவிகிதம் குறைந்துள்ளதாக Retail Economics என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், செல்வந்தர்களின் வருவாயோ, 10.3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அதே தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தெரிந்தோ தெரியாமலோ, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாட்டு மக்கள் நிலைமையை தனது புத்தாண்டு தின உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘கடந்த ஆண்டில் ஸ்கொட்லாந்தில் ஒரு சிறுமி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள், வறுமை குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பதை அவள் தனது கடிதத்தில் விவரித்திருந்தாள்.

காலை உணவு இல்லாததால் பசி, வீடுகளை வெப்பப்படுத்த வசதி இல்லாததால் குளிர், கிழிந்த சீருடையை அணிந்து செல்வதால் பள்ளியில் சந்திக்கும் அவமானம், இவை எல்லாம் சேர்ந்து கொடுக்கும் சோர்வு’, என தனது நிலைமையை அந்தச் சிறுமி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாளாம்.
அந்தச் சிறுமியின் கடிதம் குறித்து கேள்விப்படும்போது, நம் நாட்டவர்கள் அன்னாந்து பார்க்கும் பிரித்தானிய போன்ற நாடுகளில் இப்படி ஒரு நிலைமையா என எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை!
ஆக, பிள்ளைகளின் வறுமையை இந்த ஆண்டில் தீர்ப்பது என முடிவு செய்துள்ளதாக தனது புத்தாண்டு உரையில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டார்மர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |