பிரதமர் ஸ்டார்மருக்கு மேலும் ஒரு பெரிய அடி: முக்கிய இருக்கையை இழந்தது லேபர் கட்சி
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சி, மீண்டும் ஒரு முக்கிய இருக்கையை இழந்துள்ளது.
முக்கிய இருக்கையை இழந்த லேபர் கட்சி
வேல்ஸ் நாட்டில், Caerphilly தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Hefin David என்பவர் ஆகத்து மாதம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அந்த தேர்தலில் ஆளும் லேபர் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. லேபர் கோட்டையான Caerphillyயை அக்கட்சி இழந்துள்ளதால் அது பிரதமர் ஸ்டார்மருக்கு மற்றும் ஒரு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே லேபர் கோட்டையான Runcorn and Helsby தொகுதியை இழந்துவிட்ட நிலையில், தற்போது Caerphilly தொகுதியையும் தவறவிட்டுள்ளது லேபர் கட்சி.
இந்த இடைத் தேர்தலில் மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுவரும் நைஜல் ஃபராஜின் Reform UK கட்சியும் தோல்வியடைந்துவிட்டது.

இந்த இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, Plaid Cymru என்னும் கட்சியைச் சேர்ந்த Lindsay Whittle என்பவர் 15,961வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
லேபர் கட்சிக்கு வெறும் 3,713 வாக்குகள்தான் கிடைத்துள்ளன. ஆக, ஏற்கனவே ஸ்டார்மருக்கு ஆதரவு குறைந்துவரும் நிலையில், இந்த தோல்வி அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |