ஸ்டார்மர்-ஜின்பிங் சந்திப்பு: பிரித்தானியா-சீனா உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பீஜிங்கில் முக்கிய சந்திப்பை நடத்தி, இரு நாடுகளின் உறவுகளை மீண்டும் அமைக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் சீனாவிற்கு சென்ற முதல் பிரித்தானிய பிரதமர் என்ற வரலாற்றை ஸ்டார்மர் பதிவு செய்துள்ளார்.
80 நிமிடங்கள் நீண்ட உச்சி மாநாட்டில், இரு தலைவர்களும் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக தடைகள் குறைப்பு, மனித கடத்தல் கும்பல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
"சீனாவுடன் நுணுக்கமான உறவை உருவாக்க வேண்டும். ஒத்துழைக்கக்கூடிய துறைகளை அடையாளம் காண வேண்டும். அதேசமயம், கருத்து வேறுபாடுகள் குறித்து திறந்த உரையாடல் அவசியம்” என ஸ்டார்மர் கூறியுள்ளார்.

“பிரித்தானியா-சீனா உறவுகள் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளன. ஆனால் நீண்டகால கூட்டாண்மையை உருவாக்க சீனா தயாராக உள்ளது” என ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில்,
விஸ்கி மீதான வரி குறைப்பு குறித்து முன்னேற்றம் காணப்பட்டது.
பிரித்தானிய குடிமக்களுக்கு விசா விலக்கு வழங்க சீனா பரிசீலிக்கிறது.
மனித (புலம்பெயர் மக்கள்) கடத்தல் கும்பல்களை ஒழிக்க இரு நாடுகளும் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன.
ஸ்டார்மர், சீன கலாச்சாரம் குறித்து உரையாடியதோடு, ஷேக்ஸ்பியர் மற்றும் கால்பந்து பற்றியும் ஜி ஜின்பிங்குடன் பகிர்ந்துகொண்டார். 50-க்கும் மேற்பட்ட பிரித்தானிய வணிகத் தலைவர்கள் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.
இந்த சந்திப்பு, அமெரிக்கா-சீனா பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரித்தானியா-சீனா இடையிலான உறவுகளை புதிய பாதையில் கொண்டு செல்லும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Keir Starmer Xi Jinping meeting, UK China relations 2026 news, Britain China economic cooperation, Starmer Beijing diplomatic visit, UK-China strained ties reset, Xi Jinping UK Prime Minister talks, UK China trade negotiations 2026, Starmer China foreign policy update, Britain China visa waiver talks, UK China business leaders summit