பிரித்தானியாவில் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை: தீவிரப்படுத்தும் பிரதமர் ஸ்டார்மர்
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மேக்ரான் கோரிக்கை விடுத்த நிலையில், பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் வசிப்பதையும் வேலை செய்வதையும் கடினமாக்கும் வகையில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக பிரதமர் ஸ்டார்மர் அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டிஜிட்டல் அடையாள அட்டை குதித்து அமைச்சர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான ஒரு திட்டம் பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் சிவில் உரிமைகள் மீதான தாக்கம் குறித்த விவாதங்களைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.
இனிமேல், புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும் எவரும், இந்த நாட்டில் வாழவும் வேலை செய்யவும் தங்களுக்கு உரிமை உண்டு என்பதை நிரூபிக்க தங்கள் டிஜிட்டல் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய தங்குமிடங்களுக்குச் செல்வோர், சலுகைகள் கோருவோர் அல்லது பொது சேவைகளை அணுக விரும்புவோர் ஆகியோருக்கும் இதே போன்ற விதிகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
அமைச்சர்கள் ஆய்வு
இதனிடையே, புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முனெண்டுக்க வேண்டிய நெருக்கடி பிரதமர் ஸ்டார்மருக்கு இருப்பதால், இந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் மிக விரைவில் அமுலுக்கு வரும் என்றே கூறப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு என செயல்படும் 200 ஹொட்டல்களை மூடவும் பிரதமர் ஸ்டார்மர் திட்டமிட்டு வருகிறார். எஸ்டோனியா உள்ளிட்ட பிற நாடுகளில் அமுலில் இருக்கும் இதேபோன்ற டிஜிட்டல் ஐடி திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உண்மையில், பிரதமர் டோனி பிளேர் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்த அழுத்தம் கொடுத்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டு பதவியேற்ற கூட்டணி அரசாங்கத்தால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |