ஒரு புது யுகம் பிறந்தது: நட்பு பாராட்டும் பிரித்தானியாவும் அயர்லாந்தும்
ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் அயர்லாந்து, இந்தப் பக்கம் பிரித்தானியா. அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடு, பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடு இல்லை.
ஆக, 1920ஆம் ஆண்டு, மத வித்தியாசங்கள் காரணமாக பிரிந்த அயர்லாந்தும் பிரித்தானியாவும் பிரெக்சிட்டால் மேலும் விலகிப்போக நேர்ந்தது. விளைவு, இருபக்கமும் வர்த்தகமும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன.
ஒரு புது யுகம் பிறந்தது
லேபர் கட்சி பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் நலன் கருதி சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அவற்றில் ஒரு பகுதியாக, பிரித்தானியா, அயர்லாந்து உறவுகளை மேம்படுத்த அவர் முயற்சித்துவருகிறார்.
சமீபத்தில் Cheshireஇல் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டினும் கலந்துகொண்ட நிலையில், மாநாட்டில் பேசிய ஸ்டார்மர், இன்றைய உச்சி மாநாடு, ஒரு புதிய யுகத்தின் துவக்கத்தை அடையாளப்படுத்துகிறது என்றார்.
நாம் நம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை புதுப்பித்துக்கொண்டுள்ளோம் என்று நினைக்கிறேன் என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய மைக்கேல், சிக்கலான நேரத்தில் நிலைத்தன்மையின் மையமாக நின்ற ஸ்டார்மருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஆக, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து நட்பு பாராட்டுமானால், மீண்டும் நல்லுறவு தழைத்து, இரு தரப்பிலும் அதனால் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது.
ஸ்டார்மரின் முயற்சியால், அயர்லாந்தும் ஒத்துழைக்குமானால், அது சாத்தியமானால், இரு தரப்புக்கும் பெரும் நன்மைகள் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |