ட்ரம்ப் வரி விதித்தால்... பதிலடி கொடுக்கத் தயாராகும் பிரித்தானியா
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், பல நாடுகளில் பலவித கவலைகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, தான் பதவியேற்றதுமே சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
பதிலடி கொடுக்கத் தயாராகும் பிரித்தானியா
கனடா, மெக்சிகோ, சீனா முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
ஆனால், பிரித்தானியா குறித்து அவர் எதுவும் குறிப்பிட்டுக் கூறவில்லை.
என்றாலும், ட்ரம்ப் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்தால், அதற்கு. பதிலடி கொடுக்கத் தயாராகிவருகிறது பிரித்தானியா.
ஆம், ட்ரம்ப் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Harley Davidson மோட்டார் சைக்கிள்கள், Jack Daniels விஸ்கி, Levi’s ஜீன்ஸ் ஆகிய பொருட்கள் மீது பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வரி விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |