புடினின் பிடியில் இருந்து ஐரோப்பா தப்பாது... எச்சரிக்கும் பிரித்தானிய பிரதமர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அச்சுறுத்தலால் ஐரோப்பாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
புடின் காரணமாகவே
அத்துடன், ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதாக பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது பனிப்போர் முடிவுக்கு வந்ததிலிருந்து மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதம் பாதுகாப்புக்கு செலவிட இருப்பதாகவும், பத்தாண்டுகளுக்குள் இது 3 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விளாடிமிர் புடின் காரணமாகவே தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், அவர் உக்ரைனுடன் தனது முடிவைக் கைவிடப் போவதில்லை என்றும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடியில் இருந்து நாம் ஒளிந்துகொள்ள முடியாது என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ட்ரம்புடனான சந்திப்பை முடித்துக் கொண்டு, வார இறுதியில் ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்புக்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு விளாடிமிர் புடினால் அச்சுறுத்தல் இருப்பதை மறுக்க முடியாது என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஸ்டார்மர், உக்கிரமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் கடினமான
2027 முதல் ஆண்டுக்கு 13.4 பில்லியன் பவுண்டுகள் பாதுகாப்புக்கு என செலவிட இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், மிகவும் கடினமான மற்றும் வலிமிகுந்த முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திடீரென்று ரஷ்ய ஆதரவு நிலையை எடுத்துள்ளதும், உக்ரைன் போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அந்த நாட்டு பிரதிநிதிகளை தவிர்த்ததும் ஐரோப்பா முழுவதும் ஒருவகை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, ஜெலென்ஸ்கியை சர்வாதிகாரி என முத்திரை குத்தியதும், மக்கள் செல்வாக்கை இழந்த வெறும் சாதாரண தலைவர் என ட்ரம்ப் அவரை குறிப்பிட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |