ஒப்பந்தத்தை மீறினால்... புடினுக்கு ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை
உக்ரைனுடனான சமாதான ஒப்பந்தத்தை விளாடிமிர் புடின் மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை
இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமுல்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கத்திய இராணுவ திட்டமிடுபவர்கள் வகுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே பிரதமர் ஸ்டார்மர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
லண்டனுக்கு வெளியே நார்த்வுட் இராணுவ தளத்தில் 31 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளைச் சந்தித்த பிறகு பிரித்தானியப் பிரதமர் ரஷ்ய ஜனாதிபதிக்கு தனது எச்சரிக்கையை விடுத்தார்.
எதிர்காலத்தில் உக்ரைனைப் பாதுகாக்க எந்த மேற்கத்தியப் படைகள் நிறுத்தப்படலாம் என்பதை அவர்கள் முடிவு செய்ய உள்ளனர். சமாதான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றால் உக்ரைனின் இராணுவமயமாக்கலை தடுக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி கோரியதை அடுத்து,
உக்ரைன் தன்னை எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடிவு செய்கிறது என்பதை புடின் வீட்டோ செய்ய அனுமதிக்கப்பட மாட்டார் என்று ஸ்டார்மர் கூறினார். மட்டுமின்றி உக்ரைனில் பிரித்தானியப் படைகள் களமிறங்கும் என்ற தனது வாக்குறுதியை ஸ்டார்மர் மீண்டும் வலியுறுத்தவில்லை,
அமைதியை உறுதி செய்வதாகும்
மாறாக உக்ரேனிய துருப்புக்களை ஆதரிக்க நேச நாட்டுப் படைகள் நிறுத்தப்படும் என்றார். எந்தவொரு ஒப்பந்தத்தையும் மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை ரஷ்யாவிற்கு தெளிவுபடுத்துவதே பாதுகாப்பு ஏற்பாடுகளின் நோக்கம் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தத் திட்டத்தின் நோக்கம், எஸ்தோனியாவிலும் நாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ள மற்ற எல்லா நாடுகளிலும் இருப்பது போல, அமைதியைப் பேணுவதை உறுதி செய்வதாகும் என ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ், போலந்து, நெதர்லாந்து, ருமேனியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டன. இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஸ்டார்மர் முன்வைக்கும் திட்டங்களை ஆபத்தானது மற்றும் பயனற்றது என்று விமர்சித்திருந்தாலும், இத்தாலிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, உக்ரைனில் எந்த மேற்கத்தியப் படைகளையும் ஆதரிப்பதாக உறுதியளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |