விசா நடைமுறை மற்றும் நேரடி விமான சேவை.., இந்தியாவிடம் வலியுறுத்திய சீனா
இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனா கோரிக்கை
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி 20 மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் சீனா உறவின் முக்கியமான அம்சங்கள் குறித்து இருவரும் விவாதம் மேற்கொண்டனர்.
அப்போது, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் சீனா நேரடி விமான சேவையை துவங்குமாறு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர் பரிமாற்றங்களுக்கான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், விசா நடைமுறைகளை எளிதாக்கவும் வாங் யி வலியுறுத்தியுள்ளார்.
ஜெய்சங்கர் மற்றும் வாங் யீ இடையேயான சந்திப்பு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பெய்ஜிங்கிற்கும் டெல்லிக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னை காரணமாக கடந்த 2020 -ம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
எல்லை பிரச்சனை காரணமாக இரு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ராணுவ படை விலக்கல் நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் உறவு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |