வெறும் ரூ 25,000 முதலீட்டில் தொடங்கிய தொழில்... இன்று ரூ 7,000 கோடி மதிப்பு நிறுவனத்திற்கு உரிமையாளர்
25 வயதில் வெறும் ரூ 25,000 முதலீட்டில் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பானது ரூ 7,000 கோடி என்றே கூறப்படுகிறது.
கடின உழைப்பும் விடாமுயற்சியும்
கர்நாடகா மாகாணத்தை சேர்ந்த சசி கிரண் ஷெட்டி என்பவரின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. Allcargo குழுமத்தின் உரிமையாளரான சசி கிரண் ஷெட்டி தமது 25வது வயதில் வணிக உலகில் களம்கண்டுள்ளார்.
முதலில் Trans India Freight Services Private Limited என்ற நிறுவனத்தை தொடங்கியவர், 1994ல் அதை Allcargo Logistics Limited என விரிவாக்கம் செய்தார்.
தற்போது இவரது நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 180 நாடுகளில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஷெட்டியின் Allcargo குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ 7,000 கோடி என்றே கூறப்படுகிறது.
பெரும் நன்கொடையாளராகவும்
ஷெட்டியின் இந்த வளர்ச்சிக்கு காரணம் அவரது கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி என்றே குறிப்பிடுகின்றனர். ஷெட்டி வெற்றிபெற்ற தொழிலதிபர் மட்டுமின்றி, பெரும் நன்கொடையாளராகவும் அறியப்படுகிறார்.
கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஷெட்டி பல கோடிகள் நன்கொடையாக அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |