தந்தையிடம் கடனாக வாங்கிய ரூ 4,500... இன்று ரூ 5,507 கோடி மதிப்புள்ள தொழில் சாம்ராஜியம்
தந்தையிடம் கடனாக வாங்கிய பணத்தில் மிக எளிமையாகத் தொடங்கப்பட்ட தொழில், இன்று ரூ 5,507 கோடி மதிப்புள்ள தொழில் சாம்ராஜியமாக வளர்ச்சி கண்டுள்ளது.
சிற்றுண்டிக் கடை
கோபால் ஸ்நாக்ஸ் நாட்டின் முன்னணி சிற்றுண்டி பிராண்டுகளில் ஒன்றாகும், இது சுமார் நான்கு லட்சம் சில்லறை விற்பனையாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
மிதிவண்டியில் சிற்றுண்டிகளை விற்பதில் இருந்து ரூ 5,507 கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யத்தை வழிநடத்துவது வரை, பிபின்பாய் விட்டல் ஹத்வானியின் பயணம் என்பது புதிய தலைமுறைக்கு உத்வேகம் அளிப்பதாகவும்.
குஜராத்தின் ராஜ்கோட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஹத்வானியின் தந்தை பாரம்பரியமான குஜராத்தி சிற்றுண்டிக் கடை ஒன்றை வைத்திருந்தார். சிறு வயதிலேயே தமது தந்தை தொழிலை நடத்துவதைப் பார்த்து, ஹத்வானி அதற்கான விருப்பத்தை வளர்த்துக் கொண்டார்.
காலப்போக்கில், அவர் தொழில்முனைவோர் திறன்களை வளர்த்துக் கொண்டு அவற்றை மெருகூட்டினார், குடும்ப வர்த்தகத்தை புதிய உயரத்திற்கு விரிவுபடுத்துவதற்கான வழிகளை உருவாக்கினார்.
தொழில் செய்வேன் என அடம்பிடித்த ஹத்வானிக்கு அவரது ரூ.4,500 கடனாகக் கொடுத்து, அதைச் செலவழித்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்குவதை மறந்துவிடுவார் என்று நினைத்தார்.
ஆனால் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி தனது முயற்சிகளைத் தொடங்கினார் ஹத்வானி. தனது நண்பர் ஒருவருடன் இணைந்து சிற்றுண்டி விற்பனையில் உத்யோகப்பூர்வமாக களமிறங்கினார்.
கடின உழைப்புக்கு பலன்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது நண்பரைப் பிரிந்து, தனது பங்காக ரூ 2.5 லட்சத்தைப் பெற்றார். அந்தப் பணத்தில், கோபால் ஸ்நாக்ஸை மேலும் விரிவுபடுத்த இலக்கு வைத்தார்.
1994ல், அவர் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு புதிய வீட்டை வாங்கி, தொழிலைத் தொடர அதை ஒரு தொழிற்சாலையாக மாற்றினார். மட்டுமின்றி இரவும் பகலும் கடுமையாக உழைத்து, ராஜ்கோட்டில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களைச் சந்தித்து தங்கள் பொருட்களை விற்றனர்.
அவர்களின் சிற்றுண்டிகளுக்கான தேவைகள் அதிகரிக்கத் தொடங்கியதால் அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது, இது இறுதியில் ராஜ்கோட்டின் புறநகரில் தொழிற்சாலையை அமைக்க அவர்களைத் தூண்டியது.
ஹத்வானியின் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால், கோபால் ஸ்நாக்ஸ் தற்போது நாட்டின் நான்காவது பெரிய ஸ்நாக்ஸ் பிராண்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |