வெறும் ரூ 1.6 லட்சம் முதலீட்டில் தொடங்கிய நிறுவனத்தை ரூ 4,238 கோடிக்கு விற்ற பெண்மணி: யார் இவர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வெறும் ரூ 1.6 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனத்தை ரூ 4,238 கோடிக்கு விற்றுள்ளார் இந்திய வம்சாவளி பெண் ஒருவர்.
அமெரிக்காவின் பணக்கார பெண்
இந்திய வம்சாவளி நீர்ஜா சேத்தி என்பவரே தமது கணவருடன் இணைந்து தொடங்கிய Syntel என்ற நிறுவனத்தை பல கோடிகளுக்கு விற்றவர். மட்டுமின்றி, ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் பணக்கார பெண்மணியாக பலமுறை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீர்ஜா மற்றும் அவரது கணவர் பாரத் தேசாய் ஆகியோர் இணைந்து தான் தங்களது குடியிருப்பில் வைத்து Syntel என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஏப்ரல் 1980 முதல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார் நீர்ஜா சேத்தி. அவரது கணவர் தலைவர் பொறுப்பில் இருந்தார்.
அக்டோபர் 2018ல் பிரான்ஸ் நிறுவனமான Atos SE சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Syntel நிறுவனத்தை வாங்கியது. இதில் நீர்ஜாவுக்கு அவரது பங்காக சுமார் 510 மில்லியன் டொலர் ( இந்திய மதிப்பில் ரூ 4,238 கோடி) கிடைத்துள்ளது.
990 மில்லியன் அமெரிக்க டொலர்
இந்தியாவின் டெல்லியில் 1955ல் பிறந்த நீர்ஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பட்டம் பெற்றார். ஓக்லாண்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
சுயமாக உருவான 100 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் நீர்ஜா 25வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு தற்போது 990 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. 2021 தொடக்கத்தில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 14வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |