வெறும் ரூ 2,000 முதலீட்டில் தொடங்கிய தொழில்... இன்று பல கோடிகள் மதிப்பில் நிறுவனம்
இராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த Shelly Bulchandani என்ற இளம் தொழிலதிபர் ஊடக நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக உலக அளவில் திடீரென்று கவனம் பெற்றுள்ளார்.
கூந்தல் தொடர்பிலான நிறுவனம்
அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த Shelly Bulchandani என்பவரின் நிறுவனத்தின் பெயர் The Shell Hair. கூந்தல் தொடர்பிலான நிறுவனம் இது. 2020ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது மாற்று கூந்தல், விக்குகள் உட்பட அனைத்து பொருட்களையும் தற்கால இளையோரை ஈர்க்கும் வகையில் தயாரித்து வருகிறது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்ட மேற்படிப்பு மாணவியான ஷெல்லி, தமது கல்வியையும் தொழிலையும் ஒரேசேர முன்னெடுத்து செல்கின்றார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது நிறுவனத்தின் தரமான தயாரிப்புகள் இந்தியா முழுக்க ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.
தரமான தயாரிப்புகள் மட்டுமின்றி, மலிவான விலையும் அவரது நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. தமது 20வது வயதில் தொழில் செய்ய முடிவெடுத்த ஷெல்லி, ரூ 2,000 முதலீட்டில் ஜெய்ப்பூர் பகுதியில் இருந்து தலை முடி வாங்கியுள்ளார்.
இன்று ரூ 10 கோடி சந்தை மதிப்பு
அவரது முதல் முயற்சி வெற்றியை தேடித்தர, ஆண்டு வருவாய் என்பது 1.2 கோடி என அதிகரித்துள்ளது. பல சவால்களை எதிர்கொண்டாலும், அவரது விடாமுயற்சி தமது தொழிலை முன்னெடுத்து செல்ல உதவியுள்ளது.
தற்போது தமது நிறுவனத்தின் 3 சதவித உரிமைப்பங்குகளுக்கு ரூ 30 லட்சம் கோரிய அவர், சந்தை மதிப்பை ரூ 10 கோடி என அதிகரிக்கும் திட்டத்தையும் முன்வைத்துள்ளார். வெறும் ரூ 2,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று ரூ 10 கோடி சந்தை மதிப்பை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |