குடியிருப்பிலேயே தொடங்கப்பட்ட நிறுவனம்... ஆண்டுக்கு ரூ 3.1 கோடி சம்பளம்: தற்போதைய சந்தை மதிப்பு
டெல்லியை சேர்ந்த சாஹில் பருவா என்பவர் தமது குடியிருப்பிலேயே தொடங்கிய நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 30,000 கோடி என்றே தெரியவந்துள்ளது.
மூவருடன் இணைந்து Delhivery நிறுவனம்
கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டம் படித்த சாஹில் பருவா, பின்னர் ஐஐஎம் பெங்களூரில் எம்பிஏ பட்டம் பெற்றார். 2007ல் Stayglad நிறுவனத்தில் பணியாற்றிய சாஹில், சொந்தமாக தொழில் தொடங்கும் முன்னர் Bain and Company என்ற நிறுவனத்தில் இணை ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் தான் 2011ல் சாஹில் பருவா தமது நண்பர்கள் மூவருடன் இணைந்து Delhivery என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். Delhivery தற்போது இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளவாட நிறுவனமாக வளர்ந்துள்ளது.
தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சாஹில் ஆண்டுக்கு சுமார் ரூ 3.1 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் Delhivery நிறுவனத்தின் இதுவரையான வருவாய் என்பது ரூ 7,225 கோடி என்றே கூறப்படுகிறது.
48 மணி நேரத்திற்குள்
டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இ-காமர்ஸ் கூரியர் சேவையாக டெல்லிவரி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. 2011 காலகட்டத்தில் , பல வணிக நிறுவனங்கள் ஈ-காமர்ஸ் வணிகங்களுக்கு விநியோக சேவைகளை வழங்கவில்லை.
டெல்லிவரி நிறுவனம் தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் மளிகை மற்றும் பேஷன் சில்லறை விற்பனை சந்தையில் நுழைந்தது. மட்டுமின்றி, Flipkart மற்றும் Amazon நிறுவனங்களுடன் இணைந்து 48 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் வகையில் தங்கள் சேவையை விரிவு படுத்தினர்.
நவம்பர் 11ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில், டெல்லிவரி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 30,054 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |