பலரும் முதலீடு செய்ய தயங்கிய நிறுவனம்... இன்று அதன் சந்தை மதிப்பு ரூ 6700 கோடி
சிலரின் போராட்டங்கள், அவர்களின் செயற்பாடுகள் பற்றிய கதைகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி, மற்றவர்களை அவர்களின் வெற்றிக்காக கடினமாக உழைக்க ஊக்குவிக்கின்றது.
பைக் டாக்ஸி சேவை
பவன் குண்டுப்பள்ளி என்பவரது கதையும் அப்படியான ஒன்று. தெலுங்கானாவைச் சேர்ந்த பவன், இளம் வயதிலேயே கணினி மற்றும் வர்த்தகத்தைக் கற்றுக்கொண்டார். இந்த அனுபவம் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு உதவியது.
அவரது கல்வித் திறமை அவருக்கு கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர வழிவகுத்தது, சாம்சங்கில் பணியாற்றிய பிறகு, பவன் தனது நண்பர் அரவிந்த் சங்காவுடன் சேர்ந்து "தி கேரியர்" நிறுவனத்தைத் தொடங்கினார்.
மினிட்ரக்குகளைப் பயன்படுத்தி நகரங்களுக்கு இடையேயான தளவாடங்களில் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிறுவனம். தொடர்ந்து 2014ல் ராபிடோ என்ற பைக் டாக்ஸி சேவையை நிறுவினார்.
அவர் எதிர்கொண்ட பெரும் பின்னடைவுகளில் ஒன்று, ராபிடோவுக்கு நிதியளிக்க 75 முதலீட்டாளர்கள் மறுத்துள்ளனர். ஓலா, உபர் போன்ற ஜாம்பவான்களை உள்ளடக்கிய கடுமையான போட்டித் துறையைப் பற்றி அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர்.
இருப்பினும் தமது முயற்சியை கைவிட பவன் தயாராக இல்லை. ராபிடோவின் தொடக்க நாட்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றாலும், அவர் உறுதியுடனும், தளர்வடையாமலும் இருந்தார்.
100க்கும் மேற்பட்ட நகரங்களில்
அவரது பொறுமைக்கு பலனளிக்கும் வகையில் 2016ல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான Pavan Munjal ராபிடோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தார்.
Pavan Munjal எடுத்த முடிவு பல முதலீட்டாளர்களை ராபிடோ மீது கவனம் செலுத்த தூண்டியது. அத்துடன் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் ராபிடோ நுழையவும் வாய்ப்பாக அமைந்தது.
ரேபிடோ தற்போது குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது, 7 லட்சம் பயனர்கள், 50,000 சாரதிகள் மற்றும் ரூ 6,700 கோடிக்கு மேல் சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. ரேபிடோ நிறுவனத்தின் செயலியை 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |