மாரடைப்பால் இறந்த சிறுமி... பகீர் பின்னணி: தாயாருக்கு ஆயுள் தண்டனை விதித்த பிரான்ஸ் நீதிமன்றம்
சொந்த மகளை பட்டினியால் கொன்றதற்காக பிரெஞ்சு தாயார் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 20 ஆண்டுகள்
பல ஆண்டுகள் துன்புறுத்தலை அனுபவித்து வந்த நிலையில், 2020ல் தமது 13வது வயதில் குறித்த சிறுமி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையில், பிரான்சின் தெற்கு நகரமான Montpellier-ல் அமைந்துள்ள நீதிமன்றம், 54 வயதான சாண்ட்ரின் பிஸ்ஸாராவை, அவரது மகள் Amandine மீது சித்திரவதை மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்ததாக குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
தண்டனையின் விதிமுறைகளின்படி, பரோலுக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு அவர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். மட்டுமின்றி, பிஸ்ஸாராவின் முன்னாள் கணவரான 49 வயது ஜீன்-மைக்கேல் க்ரோஸ், Amandine-ஐ கவனிக்கத் தவறியதாக குறிப்பிட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
இதனிடையே தமது கடைசி அறிக்கை பதிவு செய்த பிஸ்ஸாரா, எனது குழந்தைகளிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், அவ்வளவுதான் என்று குறிப்பிட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் தாம் கருத்தேதும் தெரிவிக்க விரும்பவில்லை என க்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 6, 2020 அன்று அவரது மகள் Amandine இறந்தபோது, அவரது எடை வெறும் 28 கிலோகிராம் மட்டுமே இருந்துள்ளது. அவரது மரணத்திற்குப் பிறகு மருத்துவ அறிக்கையின்படி, Amandine அதிக எடை மற்றும் தசை இழப்பு மற்றும் செப்டிசீமியாவால் பாதிக்கப்பட்டார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவகை வெறுப்பு
அவள் பல பற்களை இழந்திருந்தாள், அவளுடைய தலைமுடி பிடுங்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. Amandine பல வாரங்களாக ஜன்னல் இல்லாத கிடங்கு அறை ஒன்றில் அடைக்கப்பட்டு உணவு இல்லாமல் இருந்தாள் என்றே விசாரணையில் அம்பலமானது.
சிறு வயதில் இருந்தே Amandine கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மிகக் கொடூரமான சூழலை உருவாக்கியுள்ள பிஸ்ஸாராவுக்கு குறைந்தது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
தமது மகளுக்கு உணவின் மீது ஒருவகை வெறுப்பு இருந்தது என்றும், அவர் முறையாக சாப்பிடுவதில்லை என்றும் பிஸ்ஸாரா கூறி வந்துள்ளார். நெயில் சலூன் ஒன்றை நடத்தி வந்த பிஸ்ஸாராவுக்கு மூன்று திருமணங்களில் இருந்து எட்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |