கனேடிய நகரமொன்றில் அவசர நிலை அறிவிப்பு: விவரம் செய்திக்குள்
கனேடிய நகரமொன்றில், காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் அவசர நிலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள West Kelowna நகரிலும் Westbank First Nation என்னும் பகுதியிலும் உள்ளூர் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5,500 வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 1,000க்கும் அதிகமான வீடுகளில் வாழும் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
McDougall Creek பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளோர் அறிவிப்பு வந்ததும் வீடுகளை விட்டு வெளியேறத் தயாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
தீ பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ எந்த பகுதிகளுக்கு பரவும் என்ற அச்சம் காரணமாக மக்கள் மட்டுமின்றி, தீயணைப்புத்துறையினர் உட்பட, அதிகாரிகளும் பதற்றத்துடனேயே காணப்படும் நிலை, அந்நகரில் மட்டுமல்ல, பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதுமே காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |