பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ஜூலை மாதத்தில் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியின் பிரித்தானிய பயணம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரானும், ஜூலை மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை பிரித்தானியாவுக்கு அரசு முறைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மேக்ரானுக்கும் அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரானுக்கும், மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் விண்ட்சர் மாளிகையில் விருந்தளிக்க இருக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் பிரான்சுக்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்தார்கள்.
பிரெக்சிட்டுக்குப் பின் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவுகளை மீண்டும் கட்டி எழுப்ப அது உதவியாக இருந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |