மன்னர் சார்லசை சந்தித்தபின் கனேடிய பிரதமர் ட்ரூடோ வெளியிட்டுள்ள செய்தி
மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ஆனால், இதுவரை அது குறித்து மன்னர் சார்லஸ் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அதனால், கனேடிய மக்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், பிரித்தானியா சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மன்னர் சார்லசை சந்தித்துள்ளார்.
பிரதமர் ட்ரூடோ வெளியிட்டுள்ள செய்தி
மன்னர் சார்லசை சந்தித்தபின் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்ரூடோ.
அந்த செய்தியில், மேன்மை தங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அவர்களை இன்று சந்தித்தேன்.
கனடாவின் இறையாண்மை, சுதந்திர எதிர்காலம் முதலான, கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையான விடயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மன்னரும் ட்ரூடோவும் இங்கிலாந்திலுள்ள Sandringham இல்லத்தில் சந்தித்துப் பேசிய நிலையில், அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
I met with His Majesty King Charles III this morning.
— Justin Trudeau (@JustinTrudeau) March 4, 2025
We spoke about matters of importance to Canadians — including, above all, Canada’s sovereign and independent future. pic.twitter.com/eVjWWiTrrr
என்றாலும், ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அச்சுறுத்துவது குறித்த விவாதங்கள், மன்னர் மற்றும் ட்ரூடோவின் சந்திப்பில் இடம்பெற்றதாக Associated Press என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |