சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா? இலங்கை வீரர் வெளியிட்ட அறிக்கை
இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமன்னே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
இதுகுறித்து லஹிரு திரிமன்னே வெளியிட்ட அறிக்கையில், நான் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சில செய்திகளைப் பார்த்தேன்.
நான் இப்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் இருப்பதாக உணர்வதால் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஆனால், குழந்தை பிறக்க இருப்பதால் துரதிர்ஷ்டவசமாக, எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டேன்.
✌️??❤️ pic.twitter.com/s1MkWVd6x0
— Lahiru Thirimanna (@thiri66) November 9, 2021
ஆனால் நான் விரைவில் இலங்கை அணிக்கு திரும்புவேன். நலம் விரும்பிகளுக்கு நன்றி. விரைவில் சந்திப்போம் நண்பர்களே என திரிமன்னே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.