முடிவுக்கு வருகிறதா கொரோனா? பிரித்தானியாவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள்

Corona Britain
By Balamanuvelan Jan 13, 2022 06:05 AM GMT
Report

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பிரித்தானியாவில் 129,587 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால், கடந்த புதன்கிழமையை ஒப்பிடும்போது தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது அரசின் புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் Omicron வகை கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கும் முன்பே அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.

தற்போது, அதே நிலை பிரித்தானியாவிலும் உருவாகியுள்ளதோ என எண்ணும் வகையில், பிரித்தானியாவிலும் தொடர்ச்சியாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது.

நேற்று பிரித்தானியாவில் 398 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை ஒப்பிடும்போது ஐந்தில் ஒரு பாகம் அதிகம்தான். ஆனால், கடந்த ஜனவரியை ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை ஐந்து மடங்கு குறைவு ஆகும்.

முடிவுக்கு வருகிறதா கொரோனா? பிரித்தானியாவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள் | Statistics That Have Created Confidence In Britain

ஆனால், கொரோனாவால் தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அது குறைந்து வருவது தெரிகிறது.

Omicron மையப்புள்ளியாக கருதப்படும் லண்டனில், தொடர்ச்சியாக 10 நாட்களாக கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது, நாடு முழுமைக்கும் ஒரு நல்ல அறிகுறியாக காணப்படுகிறது.

ஒரு விடயம் என்னவென்றால், நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை சீராக இல்லை. அதாவது, சில பகுதிகளில் இன்னமும் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.

ஆனால், மொத்தமாக பிரித்தானியாவைப் பார்க்கும்போது, இந்த Omicron தொற்று காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி, முன்போல் அழுத்தத்திற்கு ஆளாகிவிட நேரிடுமோ என்று அஞ்சிய நிலை நிதர்சனமாகவில்லை.

சொல்லப்போனால், தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக செய்திகள் வெளியானபோது, இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலரான Sir Chris Whitty, அதை நிராகரித்துவிட்டார். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், இப்போது அவரிடமிருந்தே நேர்மறையான கருத்துக்கள் வரத்துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

முடிவுக்கு வருகிறதா கொரோனா? பிரித்தானியாவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள் | Statistics That Have Created Confidence In Britain

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US