பிரபல இந்திய நடிகர் நடிகைக்கு லண்டனில் சிலை திறப்பு
பிரபல இந்திய நடிகரான ஷாரூக் கான் மற்றும் நடிகை கஜோல் ஆகியோருக்கு லண்டனில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் பிரபல இந்திய நடிகர் நடிகைக்கு சிலை திறப்பு

லண்டனிலுள்ள Leicester சதுக்கம் என்னுமிடத்தில், பிரபல இந்திய நடிகரான ஷாரூக் கான் மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் இணைந்து நிற்கும் சிலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
ஷாரூக் மற்றும் கஜோல் இணைந்து நடித்த ’ Dilwale Dulhania Le Jayenge’ என்னும் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடுவதை நினைவுகூரும் வகையில், அவர்கள் இருவரும் அந்தப் படத்தில் நடித்த காட்சி ஒன்றை சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர்கள் இருவருமே அந்த சிலையைத் திறந்துவைத்தார்கள்.

1995இல் வெளியான அந்த திரைப்படத்தின் கதைக்களம், இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த திரைப்படத்தில் இதே Leicester சதுக்கமும் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |