ஹரி- மேகனுக்கு இனி அந்த வாய்ப்பு இல்லை... ஒதுங்க வேண்டும்: மன்னர் சார்லஸ் ஆதரவாளர்கள் காட்டம்
மன்னர் சார்லஸின் முடிசூட்டும் விழாவில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகன் மெர்க்கல் ராணியாரை கேலி
இந்த வார தொடக்கத்தில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர். அந்த ஆவணப்படம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய ராஜகுடும்பத்தை மொத்தமாக விமர்சித்துள்ள ஆவணப்படத்தில் மேகன் மெர்க்கல் மறைந்த ராணியாரையும் கேலி செய்துள்ளார்.
@getty
இந்த நிலையில் மரியாதைக்குரிய வட்டத்தில் இருக்கும் சிலர், மன்னரின் முடிசூட்டு விழாவில் ஹரி- மேகன் தம்பதி பங்கேற்பது முறையல்ல என தெரிவித்துள்ளனர். அவர்கள் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் தகுதியை இழந்துள்ளனர்.
அவர்கள் அந்த விழாவிற்கு வரத்தேவையில்லை என முக்கிய அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தை விற்று காசாக்கும் பணியில் ஹரியும் மேகனும் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானிய மக்களிடம் அவர்களுக்கு இனி மரியாதை என்பதே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாறாக, மே 6ம் திகதி விழாவில் அவர்கள் அழையா விருந்தாளியாக கலந்துகொண்டாலும், மக்கள் அவர்களை புறந்தள்ள வேண்டும் என்றார்.
Netflix
மக்கள் அவர்களை புறந்தள்ள வேண்டும்
ராஜகுடும்பத்தின் மீது இத்தனை வெறுப்பை வைத்திருக்கும் அவர்கள், மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள ஏன் ஆசைப்பட வேண்டும் என முக்கிய அரசியல்வாதி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முடிசூட்டும் விழாவினை முன்னிட்டு ஹரி- மேகன் தம்பதி பிரித்தானியா வந்தாலும், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால் போதும் என தெரிவித்துள்ளார் ராஜகுடும்ப வரலாற்று ஆசிரியர் ஒருவர்.
மேகன் மெர்க்கலை இன ரீதியாக ஒதுக்கியதாகவும், குடும்ப உறுப்பினராக கருத்த ராஜகுடும்பம் மறுத்ததாகவும் இதுவரை வெளியான ஆவணப்படத்தில் ஹரி- மேகன் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.
தம்மை மன்னர் சார்லஸ் கண்டுகொள்ளவில்லை
தமது காதலி என்பதால் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம் திருமணம் செய்துகொள்ளவில்லை எனவும், ராஜகுடும்பத்திற்கு ஏற்றார்போல அவர் நடந்துகொள்வார் என்பதாலையே அந்த திருமணம் நடந்தது என சகோதரர் தொடர்பில் ஹரி குறிப்பிட்டிருந்தார்.
Netflix
தாயாரின் மறைவுக்கு பின்னர் தம்மை மன்னர் சார்லஸ் கண்டுகொள்ளவில்லை எனவும் ஹரி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த களேபரங்களுக்கு நடுவிலும், அரண்மனை ஒருபோதும் இளவரசர் ஹரி குடும்பத்தை ஒதுக்குவாதாக இல்லை எனவும்,
மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ஹரி- மேகன் தம்பதிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.