விடமாட்டோம்... கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை

Canada
By Balamanuvelan May 18, 2026 12:09 PM GMT
Report

கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், நீதிபதி ஒருவர் அந்த மனுவை நிராகரித்துவிட்டார்.

ஆல்பர்ட்டா மாகாணத்துக்கு சுதந்திரம்

கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும். 

விடமாட்டோம்... கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை | Stay Free Alberta Files Appeal Of Court Decision

ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது. 

ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். 

முதல் ஹன்டா வைரஸ் பாதிப்பை உறுதி செய்துள்ள கனடா

முதல் ஹன்டா வைரஸ் பாதிப்பை உறுதி செய்துள்ள கனடா

இந்நிலையில், Stay Free Alberta என்னும் அமைப்பின் தலைவரான மிச் சில்வெஸ்டர் என்பவர், முறைப்படி அரசின் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பில் புகார் மனு ஒன்றை உருவாக்கினார்.

அந்த மனு வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமானால், அது சுமார் 178,000 கையெழுத்துக்களைப் பெறவேண்டும். 

விடமாட்டோம்... கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை | Stay Free Alberta Files Appeal Of Court Decision

ஆனால், அந்த மனு 300,000 கையெழுத்துக்களைப் பெற்றுவிட்டதைத் தொடந்து, மனு முறைப்படி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

மனு அங்கீகரிக்கப்படும் நிலையில், அக்டோபர் மாதம் 19ஆம் திகதி அது வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்ற நிலை காணப்பட்டது.

நீதிபதி அதிரடி தீர்ப்பு

ஆனால், அந்த மனுவை நீதிபதி ஒருவர் நிராகரித்துவிட்டார்! ஆம், இப்படி ஒரு மனுவை ஆல்பர்ட்டா தேர்தல் அமைப்பு ஏற்றுக்கொண்டிருக்கவே கூடாது என்று கூறிவிட்டார், Justice Shaina Leonard என்னும் நீதிபதி.

அதாவது, 19ஆம் நூற்றாண்டில், பூர்வக்குடியினருக்கு உரிமைகள் அளிக்கும் வகையிலான பல ஒப்பந்தங்கள் பூர்வக்குடி மக்களுக்கும் ஆளும் அரசுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டன. 

விடமாட்டோம்... கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை | Stay Free Alberta Files Appeal Of Court Decision

ஆக, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது பூர்வக்குடியினரின் சட்ட மற்றும் பிராந்திய உரிமைகளை பாதிக்கும்.

அப்படியிருக்கும் நிலையில், ஆல்பர்ட்டாவை கனடாவிலிருந்து பிரிப்பது தொடர்பான பேச்சு எழுந்தபோது, அது குறித்து பூர்வக்குடியினருடன் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால், மாகாண அரசோ, தேர்தல் அதிகாரிகளோ பூர்வக்குடியினருடன் கலந்தாலோசிக்கவில்லை.

ஆகவே, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான மனு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கை ஆக, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிப்பது குறித்த விடயம் இனி கிடப்பில் போடப்பட்டுவிடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடத்துவங்கின.

இந்நிலையில், அந்த விடயத்தை அப்படியே விடப்போவதில்லை என மனுவை முன்வைத்த Stay Free Alberta அமைப்பு தெரிவித்துள்ளது.

தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்பினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், Stay Free Alberta மற்றும் Alberta Prosperity Project ஆகிய அமைப்புகளின் பொது ஆலோசகரான ஜெஃப்ரி ராத், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை, நீதிபதி லியோனார்டின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, நாங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு தடையாணை மனுவைத் தாக்கல் செய்யப் போகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், இது மிகவும் மோசமான தீர்ப்பு என்பதாலும், 301,620 ஆல்பர்ட்டா மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை அந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நாங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போகிறோம் என்றும் கூறியுள்ளார் அவர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US