நீச்சல் கற்றுக்கொடுப்பதாக 2 வயது குழந்தையை கொன்ற கொடூர பெற்றோர்
அமெரிக்காவில் நீச்சல் கற்றுக்கொடுக்க 2 வயது குழந்தையை மீண்டும் மீண்டும் குளத்தில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் அதன் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு சூன் மாதம் 2 வயது ஆண் குழந்தை நீச்சல் குளத்தில் உயிரிழந்தது.
குழந்தையின் பிரேத பரிசோதனையில் அதன் தலை, முகம் மற்றும் உடலில் "பல அதிர்ச்சிகரமான காயங்கள்" ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது நீண்ட நேரமாக நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதுதொடர்பில் குழந்தையின் வளர்ப்பு தந்தை டகோடா ஷான் ஹேஸ் (29) மற்றும் தாய் அன்னஸ்டாஸியா (24) ஆகிய இருவரும், திங்களன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் முதல் நிலை கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் நலனுக்கு ஆபத்தை விளைவித்ததாக தாய் அன்னாஸ்டேசியா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதே சமயம் அட்கின்ஸ் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |