CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங் - எந்த பயிற்சியாளரும் செய்யாத சாதனை

Chennai Super Kings TATA IPL
By Karthikraja Jul 13, 2026 07:10 AM GMT
Report

CSK அணியிமன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளெமிங் விலகியுள்ளார்.

CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங்

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஸ்டீபன் பிளெமிங், 10 போட்டிகளில் 196 ஓட்டங்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 2வது இடத்தைப் பிடித்தது. 

CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங் - எந்த பயிற்சியாளரும் செய்யாத சாதனை | Stephen Fleming Steps Down As Csk Head Coach

பிளெமிங் 2009 ஆம் ஆண்டில் வீரராக ஓய்வு பெற்ற பின்னர், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டதில், 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதே போல், 2010 மற்றும் 2014 CLT20 தொடரில் CSK அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

மேலும், 12 முறை பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன், 10 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. 

இது மட்டுமல்லாது, 2022 இல் SA20 தொடரின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் 2023 இல் மேஜர் லீக் கிரிக்கெட்டின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய சூப்பர் கிங்ஸ் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். 

CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங் - எந்த பயிற்சியாளரும் செய்யாத சாதனை | Stephen Fleming Steps Down As Csk Head Coach

தற்போது பரஸ்பர ஒப்புதலுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளமிங் விலகியுள்ளார்.

ஒரு ஐபிஎல் அணிக்கு நீண்ட காலமாக பயிற்சியாளராக இருந்தவர், அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "விளையாட்டுத் துறையில் 18 ஆண்டுகள் என்பது ஒரு வாழ்நாள் போன்றது, மேலும் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் விடைபெறுகிறேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது காலம், எனது பயிற்சியாளர் வாழ்க்கையின் ஒரு பெரும் பாக்கியமாகும். நாங்கள் சாதித்த அனைத்தையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள CSK CEO காசி விஸ்வநாதன், இந்தப் பயணத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே, நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதை மட்டுமல்ல, ஒரு அணியாக நாங்கள் எப்படி இருக்க விரும்பினோம் என்பதையும் வரையறுக்க ஃபிளெமிங் உதவினார்.

நிலைத்தன்மை, பணிவு மற்றும் அணிக்கு முதலிடம் அளித்தல் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கலாச்சாரத்தை அவர் உருவாக்கினார். அவருடைய செல்வாக்கு எல்லைகளைக் கடந்து வெகுதூரம் பரவியுள்ளது.மேலும் இந்த அற்புதமான பயணத்தை நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொண்டதில் பெருமிதம் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.   

CSK அணியின் நட்சத்திர வீரரான தோனி, வயோதிகம் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில், அணியின் அடுத்த பயிற்சியாளராக தோனி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US