செலவைக் குறைப்பதற்காக பிரித்தானிய அரண்மனை எடுத்த நடவடிக்கை: ஆனால்...
செலவுகளைக் குறைப்பதற்காக பிரித்தானிய அரண்மனையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதையும் மீறி செலவு அதிகரித்துள்ளதாக வருடாந்திர வரவு செலவு கணக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.
செலவைக் குறைப்பதற்காக அரண்மனை எடுத்த நடவடிக்கை
சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றதிலிருந்தே, செலவுகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அரண்மனையில் நடைபெறும் விசேட நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்படுகிறது.
இளவரசர் ஹரியும் அவரது குடும்பமும் வாழ்ந்த வீட்டைக் கூட காலி செய்தாயிற்று.
BBC
அறைகளை வெப்பப்படுத்துவதால் மின்சாரம் வீணாகக் கூடாது என்பதற்காக, அரண்மனையில் மக்கள் வாழும் அறைகளில் வெப்பநிலை 19 டிகிரி செல்ஷியஸாகவும், ஆட்கள் இல்லாத அறைகளின் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஷாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கைமீறிப்போன செலவு
செலவுகளைக் குறைப்பதற்காக இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், வருடாந்திர கணக்கு வழக்குகளைப் பார்த்தால் செலவு அதிகமாகித்தான் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அரண்மனை செலவுகளுக்காக இந்த ஆண்டு (2022 -23)ஒதுக்கப்பட்ட தொகை, 86.3 மில்லியன் பவுண்டுகள். கடந்த ஆண்டும் இதே தொகைதான் ஒதுக்கப்பட்டது.
Mint
ஆனால், செலவு, 107.5 மில்லியன் பவுண்டுகள்! கடந்த ஆண்டைவிட செலவு 5 சதவிகிதம், அதாவது, 21 மில்லியன் பவுண்டுகள் அதிகம்.
குறிப்பாக, பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பிக்கும் செலவுக்காகவும், மறைந்த மகாராணியார் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்காகவும், மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்காகவும் அதிக செலவானதுடன், பணவீக்கமும் இந்த செலவீன அதிகரிப்புக்குக் காரணம் என்கிறார்கள் அரண்மனை அலுவலர்கள்.
விடயம் என்னவென்றால், பக்கிங்காம் அரண்மனை புதுப்பிக்கப்படுவதற்காக இந்த ஆண்டு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 34.5 மில்லியன் பவுண்டுகள். பக்கிங்காம் அரண்மனையின் புதுப்பித்தலுக்காக 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையோ 369 மில்லியன் பவுண்டுகள்.
ஆனால், அங்கு யாருமே வாழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |