எலான் மஸ்கை நாடுகடத்தவேண்டும்... ட்ரம்புக்கு வலியுறுத்தல்
எதிர்பார்த்ததுபோலவே ட்ரம்புக்கும் எலான் மஸ்குக்கும் இடையிலான திடீர் நட்பு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், எலான் மஸ்கை நாடுகடத்தவேண்டும் என ட்ரம்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திடீர் அரசியல்வாதி
ட்ரம்பின் திடீர் நண்பரான எலான் மஸ்க், ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற பெரும் தொகை செலவிட்டார்.
பதிலுக்கு எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பொன்றைக் கொடுத்தார் ட்ரம்ப். ஆனால், எலான் மஸ்கோ தன் எல்லையை மீறி உலக நாடுகளின் அரசியலில் தலையிடத் துவங்கினார்.
இந்த நட்பு நீண்ட நாள் நீடிக்காது என பலரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்ததுபோலவே ட்ரம்பும் எலான் மஸ்கும் முட்டிக்கொண்டார்கள்.
இணைபிரியா நண்பர்கள் போல சேர்ந்தே காணப்பட்ட இருவரும், இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவண்ணம் உள்ளார்கள்.
எலான் மஸ்கை நாடுகடத்தவேண்டும்...
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, ஏற்கனவே எலான் மஸ்கை கடுமையாக விமர்சித்துவந்தவர் ஸ்டீபன் (Stephen K Bannon) என்னும் ஊடகத்துறை சார்ந்த பிரபலம்.
இந்நிலையில், இதுதான் வாய்ப்பு என, எலான் மஸ்கை ட்ரம்ப் நாடுகடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்டீபன்.
எலான் மஸ்க் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ள ஸ்டீபன், எலான் மஸ்கின் புலம்பெயர்தல் நிலை குறித்து முறைப்படி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், உடனடியாக அவர் நாடுகடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |