கனடா அமெரிக்க எல்லையில் பலியான இந்தியக் குடும்பம்: வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டத்தரணிகள் கோரும் தண்டனை
கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து பலியான வழக்கில் குற்றவாளிகளுக்கு முறையே 19 மற்றும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரியுள்ளனர் சட்டத்தரணிகள்.
கனடா அமெரிக்க எல்லையில் பலியான இந்தியக் குடும்பம்
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.
Vaishali Patel/Facebook
அந்த வழக்கு தொடர்பாக ப்ளோரிடாவைச் சேர்ந்த Steve Shand மற்றும் ப்ளோரிடாவில் வாழும் இந்தியரான Harshkumar Ramanlal Patel ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்நியர்களை அமெரிக்காவுக்குள் கடத்தும் முயற்சியில் அவர்களுக்கு காயம் ஏற்படுத்தியது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது, தனிப்பட்ட முறையிலான பண மற்றும் பிற ஆதாயங்களுக்காக அவர்களைக் கடத்த உதவியது முதலான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.
குற்றவாளிகளுக்கு சட்டத்தரணிகள் கோரும் தண்டனை
இந்நிலையில், Harshkumar Ramanlal Patel தனது தவறுக்காக எள்ளளவும் வருந்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Steve Shandஉடன் இணைந்து கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டது தானில்லை என்றே அவர் கூறிவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Patelக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என்றும், அவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட Steveக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |