சர்வதேச டெஸ்டில் நான்காவது இரட்டை சதம்! கிரிக்கெட் கடவுளின் சாதனையை சமன் செய்த ஸ்டீவன் ஸ்மித்
பெர்த் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் நான்காவது முறையாக இரட்டை சதம் விளாசினார்.
அதிக சதங்கள் சாதனை
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 598 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
அந்த அணியின் லபுசாக்னே 204 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் மிரட்டலாக இரட்டை சதம் அடித்தார். அவர் 311 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 200 எடுத்து களத்தில் நின்றார்.
You CAN'T bowl there to Steve Smith! #AUSvWI pic.twitter.com/PtOd1SMXpu
— cricket.com.au (@cricketcomau) December 1, 2022
இது அவருக்கு 4வது டெஸ்ட் இரட்டை சதம் ஆகும். முன்னதாக அவர் சதம் விளாசியபோது, அதிக டெஸ்ட் சதங்கள் (29) எடுத்த நான்காவது அவுஸ்திரேலிய வீரர் என்ற முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் டான் பிராட்மேன் 52 டெஸ்ட்களில் 29 சதங்களுடன் 6996 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pic: Twitter/@ICC
அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த அவுஸ்திரேலிய வீரர்கள்:
- ரிக்கி பாண்டிங் - 41
- ஸ்டீவ் வாக் - 32
- மேத்யூ ஹேடன் - 30
-
பிராட்மேன், ஸ்மித் - 29