கிரிக்கெட் கடவுளின் சாதனையை முறியடித்த ஸ்டீவன் ஸ்மித்
ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஸ்டீவன் ஸ்மித் தனது 37வது சதத்தினை பதிவு செய்தார்.
ஸ்டீவன் ஸ்மித் சதம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
Pic: PA
டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, ஸ்டீவன் ஸ்மித் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) சதம் விளாசினார். இது அவரது 37வது டெஸ்ட் சதம் ஆகும்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 518 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சாதனை முறியடிப்பு
ஸ்டீவன் ஸ்மித் சதம் (13வது சதம்) விளாசியதன் மூலம், ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜேக் ஹாப்ஸின் சாதனையை (12 சதங்கள்) முறியடித்தார்.
அத்துடன் கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனின் சாதனை ஒன்றையும் முறியடித்தார்.
அதாவது, டான் பிராட்மேன் (Don Bradman) இங்கிலாந்து அணிக்கு எதிராக 5028 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஸ்மித் 5085 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
Pic: AFP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |