ஷமியால் நான் Bat-ஐ தொடக்கூடாது என முடிவெடுத்தேன்: அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர்
இங்கிலாந்து வரும் வரை Bat-ஐ தொடக்கூடாது என்று முடிவெடுத்ததாக அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டி
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கு இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில், சமீபத்தில் அணி விபரம் அறிவிக்கப்பட்டது.
பேட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கும் அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) விளையாட உள்ளார்.
விக்கெட்டை பறிகொடுத்த பிறகு
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து ஸ்டீவன் ஸ்மித் நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
"சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷமியின் ஃபுல் டாஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த பிறகு, நான் Batயில் கை வைக்கவே இல்லை. இங்கிலாந்திற்கு வரும் வரை Bat-ஐ தொடக் கூடாது என உறுதியாக முடிவெடுத்தேன்.
ஆனால், தற்போது பயிற்சி சிறப்பாக சென்று வருகிறது. 2014யில் இருந்தது போன்ற பலத்துடன் நான் இருப்பதுபோல உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |