அஸ்வினை பார்த்து பீதியடைந்த ஸ்டீவ் ஸ்மித்! கைதட்டி கேலி செய்த விராட் கோலி: வீடியோ
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சை பாதியில் அஸ்வின் நிறுத்தியதால் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பீதியடைந்து கோட்டுக்குள் வேகமாக திரும்பினார்.
பந்து வீச்சை இடையில் நிறுத்திய அஸ்வின்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் டெல்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 46 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய கிரிக்கெட் அணி தற்போது விளையாடி வருகிறது.
இதற்கு மத்தியில் அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 15வது ஓவரில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் செய்த செயல் மைதானத்தில் சிரிப்பலைகளை கிளப்பியது.
Kohli reactionpic.twitter.com/Vzhz3rtXyp
— Pushkar (@musafir_hu_yar) February 19, 2023
இன்னிங்ஸின் 15வது ஓவரின் போது, அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசாக்னேவுக்கு பந்து வீச தயாராகி கோட்டை நோக்கி ஓடிவந்த அஸ்வின் திடீரென பந்து வீச்சை நிறுத்திவிட்டு கோட்டை நோக்கி திரும்பினார்.
அப்போது எதிர்முனையில் நின்ற அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பீதியடைந்து தனது கிரீசுக்கு திரும்பினார். அப்போது ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்து புன்னகைத்த அஸ்வினிடம் ஸ்மித் ஒரு கட்டை விரல் காட்டினார்.
ஏற்கனவே ஐபிஎல்-லில் ஜோஸ் பட்லரை மன்கடிங் முறைப்படி ரன் அவுட் செய்து தலைப்புகளில் அஸ்வின் இடம் பிடித்து இருந்தார்.
இந்நிலையில் 2022 இல் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) மன்கடிங் முறை 'ரன் அவுட்' பிரிவில் சேர்க்கப்பட்டு இருப்பதே ஸ்டீவ் ஸ்மித் பீதிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
விராட் கோலி வீடியோ வைரல்
இந்த முழு சம்பவத்தையும் பார்த்த விராட் கோலி சிரித்தபடியே அஸ்வினின் செயலுக்கு எதிர்வினை ஆற்றினார்.
விராட் கோலியின் செயல் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது.