இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 10,000 ஓட்டங்களை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்! வரலாற்று சாதனை
காலி டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 10,000 ஓட்டங்களை எட்டினார்.
ஸ்டீவ் ஸ்மித்
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி துடுப்பாடி வருகிறது. டிராவிஸ் ஹெட் 57 ஓட்டங்களும், லபுஷேன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தொடக்க வீரர் கவாஜாவுடன் கைகோர்த்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் அடித்தார்.
மைல்கல்
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் எனும் இலக்கை எட்டினார். இதன்மூலம் இந்த சாதனையை எட்டிய 4வது அவுஸ்திரேலிய வீரர் எனும் பெருமையை ஸ்மித் பெற்றார். அத்துடன் சர்வதேச அளவில் 15வது வீரர் ஆவார்.
அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் (13,378), பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,927) ஆகியோர் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் ஆவர்.
An exclusive club welcomes another member 👏
— ICC (@ICC) January 29, 2025
Well played, Steve Smith 🏏
More ➡️ https://t.co/t44tcMDKZX pic.twitter.com/dJRoa6n0FL
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |