நள்ளிரவு 1 மணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் வெறி! மனைவி வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்
அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித், நள்ளிரவு 1 மணிக்கு பேட்டை எடுத்து சரிபார்த்த வீடியோவை அவரது மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ஆம் திகதி(டிசம்பர்) நடைபெற்றது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 16-ஆம் திகதி துவங்கிய, இப்போட்டியிலும் அவுஸ்திரேலியா அணி 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பேட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டதால் அணியின் தலைவராக ஸ்மித் நியமிக்கப்பட்டார்.
Steve Smith’s wife catches him shadow batting at 1am in their hotel room.
— Nic Savage (@nic_savage1) December 18, 2021
? Instagram/dani_willis #Ashes pic.twitter.com/5COJlUWiJt
இவர் இரண்டாவது டெஸ்ட் நடந்து கொண்டிருந்த போது, கடந்த 19-ஆம் திகதி நள்ளிரவு 1 மணிக்கு தன்னுடைய பேட்டை எடுத்து சரி பார்த்து, பயிற்சி எடுத்துள்ளார்.
அப்போது இதைக் கண்ட அவரின் மனைவி உடனடியாக வீடியோ, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 93 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 ஓட்டங்களும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.