டிராவிட், ஜெயவர்த்தனேவுடன் இமாலய சாதனைப் பட்டியலில் இணைந்த ஸ்மித்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித், முன்னாள் வீரர் மார்க் வாக்கை முந்தினார்.
ஸ்டீவ் ஸ்மித்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. மூன்றாம் நாளான இன்று நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. லாதம் 8 ஓட்டங்களில் லயன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் (9), வில் யங் (15) இருவரும் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டு கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஸ்டீவ் ஸ்மித்தின் டெஸ்ட் கேட்ச் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் அவர் சாதனைப் பட்டியலில் முன்னேறினார். அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் வாக் 181 கேட்சுகள் பிடித்து 6வது இடத்தில் இருந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அவரை முந்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் ராகுல் டிராவிட் 210 கேட்சுகளுடன் முதலிடத்தையும், மஹேல ஜெயவர்த்தனே 205 கேட்சுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள்:
- ராகுல் டிராவிட் (இந்தியா) - 210 (164 போட்டிகள்)
- மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 205 (149 போட்டிகள்)
- ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 200 (166 போட்டிகள்)
- ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 196 (168 போட்டிகள்)
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 192 (139 போட்டிகள்)
- ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா) - 182 (108 போட்டிகள்)
- மார்க் வாக் (அவுஸ்திரேலியா) - 181 (128 போட்டிகள்)
- அலைஸ்டர் குக் - 175 (161 போட்டிகள்)
- ஸ்டீபன் ஃபிளெம்மிங் - 171 (111 போட்டிகள்)
- கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 169 (117 போட்டிகள்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |