உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டியில் சதம்! பல சாதனைகள் படைத்த ஸ்டீவன் ஸ்மித்
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் அபார சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.
WTCயின் இறுதிப்போட்டி
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதி வரும் WTCயின் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது.
சிராஜ் வீசிய ஓவரில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 31வது சதத்தினை பதிவு செய்தார்.
இதன்மூலம் டெஸ்டில் அதிக சதங்கள் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அத்துடன் மேத்யூ ஹேடனை (30) பின்னுக்குத் தள்ளிய ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த ஜோ ரூட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Steve Smith loves batting at The Oval 😍
— ICC (@ICC) June 8, 2023
Third century at the ground for the Aussie star ⭐
Follow the #WTC23 Final 👉 https://t.co/wJHUyVnX0r pic.twitter.com/jnZP7Z757F
ஸ்டீவன் ஸ்மித்தின் சாதனைகள்
இருவரும் இந்திய அணிக்கு எதிராக மட்டும் 9 சதங்கள் விளாசியுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் மேலும் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அதாவது, இங்கிலாந்தின் ஒரே மைதானத்தில் (ஓவல்) அதிக சதம் (3) அடித்த இரண்டாவது வீரர், இங்கிலாந்தில் அதிக சதம் (7) அடித்த இரண்டாவது வீரர் போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
AP
டெஸ்டில் அதிக சதங்கள் அடித்த அவுஸ்திரேலிய வீரர்கள்
- ரிக்கி பாண்டிங் - 41
- ஸ்டீவ் வாக் - 32
- ஸ்டீவன் ஸ்மித் - 31
- மேத்யூ ஹேடன் - 30
- டான் பிராட்மேன் - 29
PTI